வியட்நாம் நாட்டு சோறு /Riz Cantonai

இது பிரான்ஸில் தெரியாதவர்களே இல்லையென்று சொல்லலாம். அவ்வளவு famous dish.அதனால்,இன்று உங்களுக்கு அதனை சொல்லிக்கொடுக்க போகிறேன்.

அவர்கள் பெரும்பாலும் அவர்களின்  நாட்டு அரிசியில் செய்வார்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தான் தில்லான் சொன்னதாக ஞாபகம்.  (என்னுடைய வியட்நாம் நண்பி). அது கொஞ்சம் ஒட்டும். அதனால் நாம் பாசுமதி அரிசியில் செய்தால் நன்றாக இருக்கிறது.

இப்பொழுது என்ன என்ன பொருள்கள் வேண்டும் என்று பார்ப்போமா?
 இது 5 பேருக்கு வரும்.
  • 500 கிராம் அரிசி
  • 1/2 வெங்காயம்
  • 2 முட்டை
  • 100 கிராம் கறி/ ham/jambon 4  - துண்டுகள்
  • 100 கிராம் இறால்
  • 2 கேரட்
  • 50 கிராம் பச்சை பட்டாணி
  • 200 மில்லி எண்ணெய்
  • உப்பு
  • மிளகுத்தூள்

இப்போ எப்படி செய்யறது?

 இதுக்கு இவர்கள் சொல்லறது. முதல் நாளே சோறை வடித்து குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து விடுங்கள் என்றுஅப்போ தான் நல்லா இருக்கும் என்று சொல்லுகிறார்கள்.
நான் இரண்டு விதமாகவும் செய்து பார்த்தது உண்டு.







நீங்களும் செய்து பாருங்கள் வித்தியாசம் தெரியும். எல்லாவற்றையும் நானே சொல்லிவிட்டால் பிறகு என்னதான் இருக்கிறது?

1)முதலில் முட்டையை ஆம்லெட் போல் போட்டு எடுத்து  மெல்லியதாக வெட்டுக்கொள்ளவும். அல்லது பொடிமாஸாக ஆக்கி கொள்ளலாம்.





2)வாணலை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி வெங்காயம் சிவக்க வைத்து பச்சைப்பட்டாணி, கேரட் போட்டு வேக வைக்கவும்

3)கறியை தனியாக வேக வைக்கவும்.
காய்க்கறிகள் வெந்ததும், தனியாக வைக்கவும்.

4)வேகவைத்த கறியை பிய்த்து போடவும்.





5)கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி  இறாலை வதக்கவும் தனியாக வைக்கவும்.







6)ஒரு பெரிய சட்டியில் சோற்றைப்போட்டு எல்லாவற்றையும் கலந்து,உப்பு, மிளகுத்தூள் கலந்து சிபுலத் கலந்து அடுப்பில் வைத்து கிண்டவும் சூடு ஏறியதும் எடுத்து சாப்பிடவும்.







நிறைய கிண்டுவதற்கு பதில் தம் மாதிரி போட்டால் நன்றாக இருக்கும்.


இதில் நான் போட்டு இருப்பது coquille st jacques.



copyright©Feb2014 Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts