சுக்கினி போண்டா / Beignet de courgette





இந்த சுக்கினி போண்டா ஐரோப்பாவில் செய்யும் முறை.
இது ரொம்போ சுலபமான பலகாரம்.

இதற்க்கு தேவையானவை:

  • சுக்கினி/courgette  1
  • முட்டை 2
  • 200 கிராம் மைதா
  • பேக்கிங் பவுடர் 1 தேக்கரண்டி
  • 10 கிராம் துருவிய சீஸ்
  • எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  • உப்பு
  • மிளகுத்தூள்



இப்ப செய்ய ஆரம்பிக்கலாம்:

1)சுக்கினியை துருவிய கொள்ளவும்.





2)ஒரு பவுலில் துருவிய சுக்கினி,மைதா,பேக்கிங் பவுடர்,






  முட்டை, துருவிய சீஸ்,





எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் எல்லாவற்றையும் போட்டு பிசையவும்







3)கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசையவும்.





4)தோசை மாவை விட கொஞ்சம் கட்டியாக மாவு இருக்க வேண்டும்.

5)நனறாக பிசைந்து வைக்கவும்.





6)வாணலில்  எண்ணெய் ஊற்றி காயவைக்கவும்.

7)எண்ணெய் காய்ந்ததும், மாவை அதில் போடவும்.

8)கையால் போட பிடிக்கவில்லை என்றால், ஒரு மேஜைக்கரண்டியை எடுத்து அதில் மாவை எடுத்து வாணலிக்கு நேராக வைத்து ஒரு டீஸ்பூனால் தள்ளவும்.

9)அது வெந்ததும் உருண்டையாக மேல் எழும்பி வரும்.





10)அவ்வப்போது சல்லிக்கரண்டியால் திருப்பி விட்டுக்கொண்டே இருக்கவும்.

11)சிவந்ததும் எடுத்து எண்ணெய் வடியவிட்டு, சாப்பிடவும்.




இப்ப சொல்லுங்க இது சுலபமா? இல்லையா?

சாய்ந்திரம் டிபன்னாக சீக்கிரமாக செய்து சாப்பிடலாம். அல்லவா?

Copyright Apr2014©Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts