தூக்கமும் நாமும் 1




தூக்கமும் கண்களை தவழட்டுமே

அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே


     தூக்கமும் நானும் என்றுதான்சொல்ல வேண்டும்.இதைப்பற்றி  எழுத வேண்டும் முன்பே நினைத்தேன்.

     நான் டி.வி நிகழ்ச்சி பார்ப்பது உண்டு. சீரியல் சுத்தமாக பார்க்க மாட்டேன். அதில் எனக்கு பிடித்த நிகழ்ச்சி நீயா? நானா?,வாங்க பேசலாம். இதுவும் எப்பவும் பார்க்க மாட்டேன். முடியும்போது பார்பேன். நல்ல நிகழ்ச்சி.

         இந்த நிகழ்ச்சியை பார்த்ததும். ஒரு தலைப்பு கிடைத்தது.

       ஒரு மனிதனுக்கு தேவை 8 மணி நேர தூக்கம். கண்டிப்பாக. இது பெரியவர்களுக்கு தேவை. சிறிய  பிள்ளைகளுக்கு 15லிருந்து 16 மணி நேரம் தூக்கம் கண்டிப்பாக வேண்டும்.

      இன்றுதான் தூக்கத்தை பற்றி நீயா? நானாவில் பேசினார்கள்.
அதை பார்த்தது, என் சொந்த அனுபவம் நினைவுக்கு வந்தது.
அதைப்பற்றி உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். 

     தூக்கம் வேண்டும் என்று அதிகமாகமும் வேண்டாம். அதன் பெயர் சோம்பேறி தனம்.

ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை தாண்டி நடக்க கூடாது.

இது என் அனுபவதில் கண்டது:

     நான் படிக்கும் காலத்தில் இரவில் கண் விழித்து படிப்பேன். தூங்காமல் கூட படிப்பேன். உண்மையில் ஒரு பயம். தேர்வு பயம். அதில் தூக்கம் வராமல் படிப்பேன். கடைசியாக, ஒவ்வொரு தேர்வின் போதும் உடம்பு சரி இல்லாமல் போகும்.

     இப்போது நினைக்கிறேன். அந்த தேர்வு பயம் நம் ஊரில் வருவது ஏன் என்று இப்போது நினைக்கிறேன். அதற்க்கு காரணம் நம் சுற்றத்தார்தான். ஏதாவது சுதப்பி விட்டுவிட்டால், என் சுற்றத்தாருக்கு பெரும் கொண்டாட்டம்.

     அதனால்தான், பயம் வந்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். அப்போது எல்லாம் இப்போது இருப்பது போல் படிக்கும் பிள்ளைகளுக்கு படிப்பு மட்டுமே, என்று என் வீட்டில் இருக்க முடியாது. வீட்டு வேலைகள் நிறைய இருக்கும்.

     சரி தூக்கத்துக்கு வருகிறேன். கண் விழித்து படிக்கும்போது, எப்போதும் என் அம்மாச்சி (என் அம்மாவின் அம்மா) சொல்லுவார்கள் " வந்து படுமா,எனக்கு தெரிந்த ஒருவர் இப்படி படித்துதான் மூளை குழம்பி போச்சு" கொஞ்சம் நேரம் தூங்கு. என்று சொல்லுவார்கள்.  இப்போது அதை நினைத்து பார்க்கிறேன்.

     என்னோட லட்சியம் நிறைய சான்றிதழ்(certificate) வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.  என் லட்சியம் கொஞ்சம் நிறைவேறி இருக்கிறது. கற்றது கையளவு கல்லாதது கடலளவு என்பார்கள்.நான் கற்றது சின்ன கடுகு அளவுக்கூட கிடையாது. கற்றுக்கொள்வதில் எனக்கு பேராசை அதிகம்.

      என்னை பொறுத்தவரை படிப்பும் கலையும் தான் வாழ்க்கை.

     எல்லோரையும் நம்பி விடுவேன்.காரணம்,எல்லாரும் நல்லவர்கள் என்று நினைப்பதால் வரும் வினைதான். யார் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பும் எண்ணம் தான். ஏட்டு சுரக்காயாக இருந்த்து ஓருக்காலம். அதனால், நிறைய ஏமாற்றி இருக்கிறார்கள்.

      திருமணத்திற்க்கு பிறகு, 2007 வரை தொடர்ந்து நடந்த ஏமாற்றங்களை நினைத்து நினைத்து  தூக்கம் இல்லாமல் போனது. 

     என் கணவர் எனக்கு நிறைய ஆறுதல் கூறினார். இருந்தாலும், என் மனநிலை மிகவும் பதித்தது.  ஏமாற்றங்களை தாங்கும் சக்திகளை இழந்து விட்டேன் என்று நினைக்கிறேன். தூக்கம் சுத்தமாக போனது. 

      இரவு முழுதும் டி.வி,கம்யூட்டர் என்று இருப்பேன்.
பகலிலும் தூக்கம் வராது. வேலை இருக்கும். நடந்ததையே நினைத்துக்கொண்டே இருப்பேன். இரவும் பகலும் எல்லாவித ஏமாற்றத்தையும் நினைக்க நினக்க தூக்கம் இல்லாமல் 2 வருடம் போனது.

      2009 ல் ஒரு ஞாயிற்று கிழமை எல்லாரும் தூங்கிகொண்டு இருந்தார்கள். வழக்கம்போல எனக்கு தூக்கம் வரவில்லை. நான் டி.வி,கம்யூட்டர்,புத்தகம்,என்று இருந்து விட்டு காலை 7 மணி அளவில் கொஞ்சம் படுக்கலாம் என்று படுத்தேன். அவ்வளவுத்தான் தெரியும்.
மருந்துவமனையில் எழுந்தேன்.

      என்ன என்று கேட்கிறீர்களா?

      எனக்கு இழுப்பு(crise d’epilepsie) வந்து இருக்கிறது. என் பக்கத்தில் படுத்திருந்த என் கடைசிப்பெண் பயந்து போய் எல்லோரையும் எழுப்பிவிட்டு அழுது புலம்பி இருக்கிறது. 

      என் பெரிய பெண்ணுக்கு அந்த வெள்ளிக்கிழமைத்தான் இந்த மாதிரி இழுப்பை பற்றி வகுப்பறையில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். அதனை நான் நேரடி ஒளிப்பரப்பு செய்து இருக்கிறேன். எப்போதும் என் பிள்ளைகளுக்கு எதையும் விளக்கம் கொடுப்பது என் வேலை. இதையும் செய்முறை விளக்கம் கொடுத்து இருக்கிறேன்.

     ஒரு நாள் எனக்கு சொந்த நினைவு இல்லை. பீ.பியும் மிக மிக குறைந்த நிலை. நாக்கு முழுதும் கடித்து கொண்டந்தால் ஒரு சுவையும் 15,20 நாட்கள் ஒன்றுமே தெரியவில்லை. இதில் எனக்கு என்ன கவலை என்றால், யாருமே என்  நாக்கை புகைப்படம் எடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்.

      எனக்கு இழுப்பு வந்தது அதிக பாதிப்பாக இருப்பதால், அடுத்த முறை வாராமல் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறியுள்ளார்கள். அடுத்தமுறை வந்தால், கை,கால் பாதிப்பு வரலாம் என்று கூறி உள்ளனர்.



     அதனால் மனநிலை அதிகம் பாதிகாமல் என் கணவரும்,பிள்ளைகளும் பார்த்துக்கொள்ளுகிறார்கள்.

      இந்த நோய் வந்த இரண்டு மாதம் கழித்து,ஒருநாள் நானும் என் கணவரும் பஸ்ஸுக்காக காத்துக்கொண்டு  இருக்கும்போது ஏதோ பேசிக்கொண்டு இருந்தோம்.

     அந்த சமயத்தில், என் கணவர் என்னிடம் ஏதோ ஒரு கேள்வி கேட்க,நான் பதிலே சொல்லமால்  இருந்தேன். என் கண்கள் நிலை குத்திக்கொண்டு இருந்ததாக சொன்னார்.
      அதன் பெயர் crise d’absence என்று சொல்லுகிறார்கள்.

      எனக்கு எப்படி இருந்தது என்று சொல்லுகிறேன் என்று கேளுங்கள்.

      முதலில் என் கணவர் பேசும் போது என் காதில் கேட்டது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த குரல் தூரமாக ஒலிக்க தொடங்கி கேட்கவே இல்லை. பிறகு, சிறிது நேரம் சென்று,அவர் என்னை கூப்பிடுவது தூரத்திலிருந்து வருவதுப்போலிருந்து, அருகில் கேட்டது.

       இது எனக்கு அடிக்கடி படுத்து இருக்கும் போது வந்தது. அந்த சமயம்தான் முதல் முதலில் வெளியே செல்லும் போது வந்தது.
முதலில் படுத்து இருக்கும் போது crise d’absence வந்தபோது எல்லாம் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால்,அன்று பஸ் ஸ்டாபில் இது மாதிரி ஆன பின்புதான், என் கணவர் கண்டுப்பிடித்தார். எனக்கு என்னவோ ஆகிறது என்று.

      பிறகு, டாக்டாரிடம் கேட்டோம். அப்போதுதான் இந்த நோய்க்கு அர்த்தம் புரிந்தது. இதுவும் crise d’epilepsie சம்மந்தப்பட்டதுதான்.

Crise d’absence என்றால் என்ன என்றால்.......
      இப்போது ஒரு டி.வி பார்த்துக்கொண்டு இருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். திடீர் என்று  கரண்ட் போய் விட்டால் எப்படி இருக்கும். 

       அதுப்போல்தான் இதுவும். நம் மூளைக்கு செல்லும் நரம்புகள் நமக்கு கட்டளை இடுவதை கொஞ்ச நேரம் விட்டு விடுகிறது.

        இது அடிக்கடி வருவது நல்லது கிடையாது. நரம்புகளை வீணாக்கி விடும்.

       இதுவும் மனம் சம்மந்தம் பட்டதுதான். இது வந்ததிலிருந்து நான் தனியாக வெளியே எங்கும் போவது கிடையாது.

      ஏன் என்று கேட்கிறீர்களா? 

எடுத்துக்காட்டாக: இதுமாதிரி சமயத்தில் 
மூளைக்கு செல்லும் நரம்புகள் தடைப்பட்டு விடும்.
வெளியில் செல்ல நேரிடும் போது ரோட்டில் signal போது  இப்படி வந்து விட்டால், மூளையின் நரம்புகள் தடைப்பட்ட நிலையில் சிகப்பு நிறம் என்றும் பச்சை நிறம் என்றும் நம் மூளைக்கு தெரியாதாம். ரோட்டை கடந்துக்கொண்டே இருப்போமாம். இது சில சமயம் ஆபத்தில் முடியும். 

      இவை எல்லாம் மன சஞ்லத்தால் வந்த வினை.

      என் நண்பர்கள் சொல்வது எல்லாம்  மன சஞ்சலம் கொடுப்பவர்கள் அனைவரையும் விட்டு விடு என்பார்கள். அதுமாதிரியே அவர்களை எல்லாம் விட்டு விட்டேன்.  அது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது. 
    
     மாத்திரை போட்டு தூக்கம் வருகிறது.

      வாழ்நாள் முழுதும் இனி மாத்திரை தான்.
இந்த மாத்திரையால் பக்கவிளைவுகள் நிறைய வருகிறது. இவை எல்லாம் தேவைதானா?

     Take it easy policyயாக இருந்தால் இப்படி இருக்க தேவையில்லை. என்னதான் மனதில் இருந்தாலும் நன்றாக தூங்கி விட்டாலும் இந்த பிரச்சனை கிடையாது. என்று நாம் நினைக்கலாம். நான் ஏறக்குறைய Take it easy policy type தான். 

      என்னதான் take it easy policyயாக இருந்தாலும். மேலும் மேலும் நமக்கு ஏமாற்றம் கிடைக்கும் போதும்,துக்கம் கிடைக்கும் போதும். அது நம்மை மிகவும் பாதிக்கிறது. இதனை அடுத்தவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். அல்லது அவர்களை விட்டு நாம் விலகி விட வேண்டும்.

     நான் ரொம்போ சண்டை போட மாட்டேன். என் மனதில் எப்போதும் ஒன்று படும். நியாயம் இல்லாமல்  அநியாயமாக பேசுகிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். 
    
      இது நியாயம் இல்லை என்று எடுத்து சொல்லுகிறோம். அதை அவர்கள் ஏற்கவில்லை என்றால்,
      அதன் பிறகு அவர்களிடம் எதையும் எடுத்து சொல்ல மாட்டேன். ஏன் என்றால:
1)அவர்கள் பட்டு திருந்த பிறந்தவர்கள்.
இவர்களிடம் பேசி புண்ணியம் கிடையாது.
2)இவர்களிடம் பேசினால்,நமக்குதான் கலைப்பாக,சலிப்பாக போய்விடும்.
3)நம்மை அவர் கடினமாக பேசுவதால்,ஏற்கனவே பாவம் செய்துக்கொண்டு இருக்கும் அவரின் பாவத்தை நாம் ஏன் மேன்மேலும் அதிகப்படுத்த வேண்டும்?

      அதனால், அவர்களை விட்டு விலகி விடுவேன். ஏன் என்றால், நம் நாட்டில் முதலில் முட்களால் கீறி,பிறகு கோடலியால் கொத்தியே போட்டு விடுவார்கள்.

      இந்த நோய் வந்த பிறகு, 

      பல சப்தங்கள் எனக்கு ஒத்து வருவது கிடைக்காது. தலையில் குத்தல் வந்து விடும்.

      பல வாசனைகள் ஒத்துவாராது. தலைவலி வரும்.

     இந்த சமயங்களில் நான் அந்த இடத்திலிருந்து வந்து விடுவேன். அதிக நேரம் அங்கேயே இருந்தால், crise d’absence  வரும்.

     மனசஞ்சலம் கொஞ்சம் அதிகம் ஆனால் கூட தாங்கமுடியாது.

     வார்த்தைகள் மறந்து போகும்.மறதி அதிகமாக இருக்கும். கூறியதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருப்போம். இதை விட நிறைய பின் விளைவுகள் இந்த நோயாலும்,இதற்க்காக சாப்பிடும் மருந்தாலும் இருக்கிறது தெரியுமா?

     இதுவரை எனக்கு 5,6 மருந்து மாற்றி மாற்றி கொடுத்து விட்டார்கள். எனக்கு இன்னும் சரி வரவில்லை.

     இதிலிருந்து விடுப்பட நம் மனநிலையை நாம் வேறு கோணத்தில் மாற்ற வேண்டும்.


பிறகு சிந்திப்போம் 
copyright©July2014Kolly2wood.blogspot.com

Comments

Popular Posts