Salade d’endive et Pomme/ ஆந்திவ்,ஆப்பிள் சல்லாது




    
    ஆந்திவை தமிழில் எப்படி சொல்வது என்று தெரியவிலை.
இது பார்க்க அல்லி மொட்டுப்போல் இருக்கும் வெள்ளை நிறத்தில் மஞ்சள் கலந்து இருக்கும்.

     இதில் சிறு கசப்பு இருக்கும். அந்த கசப்பு பிடிக்கும் என்றால் ஆந்திவை நீளவாக்கில் பாதியாக அரிந்து, அதில் சின்னதாக மொத்தமாக இருக்கும் அதனை எடுத்துவிடவும்.

     இது சர்க்கரை நோய்,கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சாப்பிட்டால் நல்லது. டயட் இருப்பவர்களுக்கு இது மிகவும் நல்லது. செரிக்கும் தன்மை குறைவாக இருப்பவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

     இதில் நிறைய நார்சத்து உள்ளது. இதில் கலோரி மிக மிக குறைவு. இதில் சொடியம் குறைவு. இதில் பொட்டாஷியம் அதிகம்.சுண்ணாம்பு சத்து, மெக்னிஷியம் வைட்டமின் பி எல்லாம் இதில் உள்ளது.

     ஆந்திவை வேக வைக்காமல் கேரட் போல பச்சையாக சாப்பிடலாம். வேகவைத்தும் சாப்பிடலாம்.
நான் இதனை வேகவைத்தால், வேக வைத்த தண்ணீரைக்கூட விடமாட்டேன்.

தேவையானது/ingrédients :

  • ஆந்திவ்/Endive 3
  • ஆப்பிள்/Pomme 1
  • வால்நெட்/Cerveaux de Noix concasées 25 gm/கிராம்
  • எலுமிச்சை சாறு/Jus de citron 2 C à C/தேக்கரண்டி


செய்முறை/Préparation:

1)ஆப்பிளிலுள்ள தோலை சீவி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

Éplucher la pomme et couper en dés.

2)ஆந்திவை கழுவி இரண்டாக வெட்டவும். சிறு சிறு துண்டாக வெட்டவும்.





Retirer les feuilles abîmées des endives. Couper le en 2, puis retirer la partie centrale dure qui apporte l’amertume. Puis couper les en morceaux.

3)சின்ன துண்டுகளாக வெட்டிய ஆப்பிளையும், ஆந்திவையும் ஒரு ஏனத்தில் போட்டு அதிலேயே உடைத்து வைத்திருக்கும் வால்நெட்டையும் போட்டு கலந்து விடவும்.

Dans un saladier, mélanger les morceaux d’endives et de pomme. Ajouter le jus de citron et mélanger, puis ajouter les noix concassées.




4)எலுமிச்சை பழசாறை இதில் கலந்துவிடவும். பிறகு,அதில் நாம் செய்து வைத்திருக்கும் வினேக்ரத்தை ஊற்றி கிளறிவிட்டு சாப்பிடவும்.

Arroser des vinaigrette et mélanger.

ஆப்பிள் தோலுடன் சாப்பிடப்பிடித்தால் தோலுடன் போடுங்கள். அதனைப்பிடிக்காதவர்கள் தோலை சீவிவிட்டு சாப்பிடவும்.
சின்ன பிள்ளைகளுக்கு ஆப்பிள் தோலை எடுத்து விடவும்.







Servir
copyrightFeb2015@kolly2wood.blogspot.com

Comments

Popular Posts