சிம்பிள் யாக்ருட் கேக்

வாங்கா குட்டிஸ்களா இந்தமுறை உங்களுக்காகஒரு ரெசிபி




ஒடி போய் நான் சொல்ற பொருள் எல்லாம் இருக்கானு பெரியவங்க​ கிட்ட கேளுங்க​,ஒடுங்க​.....


  • 2 யாக்ருட்  (yagourt cup)(தயிர் கிடையாது)
  • 4 யாக்ருட்  கப்  சர்க்கரை
  • 6 யாக்ருட்  கப்  மைதா
  • 2 யாக்ருட் கப்  சமையல் எண்ணெய்
  • 6 முட்டை
  • 4 தேக்கரண்டி பேக்கிங் பௌடர்
வனிலா அல்லது வேறு ஏதாவது ஒரு வாசனை கலந்து கொள்ளலாம்.


குட்டிஸ்களா!
 நான் சொன்னதை எல்லாம் அம்மா அல்லது யாராவது ஒரு பெரியவங்ககூடஎடுத்து வைச்சசா?

அந்த​ யாக்ருட் கப்  தூக்கி போடக்கூடாது. அதுதான் நமக்கு அளவு கப். புரியுதா? அதாலதான், சர்க்கரை, மைதா எல்லாம் அளக்க​ போறோம்.


இப்போ ஒண்ணு ஒண்ணா நான் சொல்லிக்கொடுப்பதை நீங்களும் அம்மா கூடவே செய்யனும். சரியா?

1)ஒரு  பவுலில் யாக்ருட், முட்டை ,சர்க்கரை,எண்ணெய் 
எல்லாவற்றையும்  கலந்து விடவும்.



2)பிறகு, மைதாவையும் அதில் போட்டு கலக்கவும்.



3)எல்லாவற்றையும் நன்றாக கலந்து விடவும்.



4)ஒரு தட்டில் எண்ணெய் தடவி லேசாக மைதா போடவும்.

5)அதில் கலந்தமாவை ஊற்றி,
மூற்சூடு(200°) செய்த​ oven (180°)னில் வைக்கவும்.

அவ்வளவுதானு கேக்கறீங்களா? அவ்வளவேதான்.

6) 30-40 நிமிடத்தில் கேக் ரெடி.

இது  ஒரு all in all  கேக்.
இந்தகேக் மிகமிகசுலபமானாது, உங்களுக்கு வேண்டியவாசனை,fruits,nuts சேர்த்துக்கொள்ளலாம்.

சாக்லெட் வேண்டுமா
அதுவும் இதனுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். மைதாவை கொஞ்சம் குறைத்துக்கொள் ளுங்கள்.

சாப்பிட்டிங்களா? எப்படி இருந்தது? சொல்லுங்க​.



இதுவும் தெரியுமா?

100gm சிம்பிள்  யாக்ருட் கேக்   :   கலோரி : 200kcal
                                                                 சர்க்கரை :  26gm
  vit A,கால்சியம்,இரும்பு சத்து உள்ளது.

copyright©Dec 2014kolly2wood.blogspot.com

Comments

Popular Posts